பிரேஸிலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், 53இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரேஸிலில் 53இலட்சத்து 649பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பினை எதிர்கொண்ட மூன்றாவது நாடாக விளங்கும் பிரேஸிலில், இதுவரை மொத்தமாக ஒரு இலட்சத்து 55ஆயிரத்து 459பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் 25ஆயிரத்து 832பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 571பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்து 88ஆயிரத்து 701பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் எட்டாயிரத்து 318பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அத்துடன் இதுவரை 47இலட்சத்து 56ஆயிரத்து 489பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.






