உக்ரைன் ரஷ்யா போரில் புடின் தந்திரோபாய அணு ஆயுதத்தை பயன்படுத்தலாம்.
உக்ரைனுக்குள் ரஷ்ய ஜனாதிபதியின் அணு ஆயுத தாக்குதல் இருக்கலாம் என வல்லுநர்கள் கணிப்பு.
உக்ரைனின் எதிர் தாக்குதலை மாற்றியமைக்க ரஷ்ய ஜனாதிபதி புடின் தந்திரோபாய அணுஆயுத தாக்குதலுக்கு உத்தரவிடலாம் என நிபுணர்களால் நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான ராணுவ நடவடிக்கையில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் ராணுவ படைகள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருவதால், புடின் அணு ஆயுத தாக்குதலுக்கு உத்தரவிடுவதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை வழங்கப்பட்டது, இதனால் உலகத் தலைவர்கள் புடினின் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வரத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில் உக்ரைனையும் ரஷ்யாவையும் இணைக்கும் இணைப்பு பாலம் கார் வெடிகுண்டு மூலம் தகர்த்தப்பட்டு இருப்பதும், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டு வருவதால் புடினின் அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கை அதிகரித்துள்ளது.
புடின் அணு ஆயுத தாக்குதலுக்கு உத்தரவிடுவாரா?
உக்ரைனின் எதிர்ப்பு தாக்குதலை மாற்றியமைக்க புடின் தந்திரோபாய அணுஆயுத தாக்குதலுக்கு உத்தரவிடலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில், மூலோபாய ஏவுகணையை விட குறைவான சக்தி கொண்ட தந்திரோபாய ஆயுதத்தை பயன்படுத்தலாம், இவை ஹிரோஷிமா மற்றும் நாகசாகி-யில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளை விட வலிமையானதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.






