ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து டியூக் ஆஃப் கென்ட் மூத்த உறுப்பினரானர்.
140க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்முறை அமைப்புகளுடன் இணைந்து ராயல் சேவை.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை தொடர்ந்து, தி டியூக் ஆஃப் கென்ட் அரச குடும்பத்தின் மிக வயதான மூத்த உறுப்பினரானார்.
பிரித்தானியாவை கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் வரை ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத் 96வது வயதில் உயிரிழந்ததை தொடர்ந்து, தி டியூக் ஆஃப் கென்ட் இளவரசர் எட்வர்ட் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளார்.
கென்ட்டின் டியூக் மற்றும் டச்சஸ் ஆகிய இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி மெரினாவுக்கு மகனாக அக்டோபர் 9, 1935ம் ஆண்டு லண்டனில் உள்ள பெல்கிரேவ் சதுக்கத்தில் இளவரசர் எட்வர்ட் பிறந்தார், இவர் கிங் ஜார்ஜ் மற்றும் ராணி மேரியின் பேரனும் ஆவார்.
ஆகஸ்ட் 25, 1942 ல் இரண்டாம் உலகப் போரின் போது ஸ்காட்லாந்தில் உள்ள கெய்த்னலில் RAF விமான விபத்தில் இளவரசர் எட்வர்ட் தந்தையான இளவரசர் ஜார்ஜ் உயிரிழந்ததை தொடர்ந்து, தந்தையின் டியூக் ஆஃப் கென்ட், ஏர்ல் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூஸ் மற்றும் பரோன் டவுன்பேட்ரிக் ஆகிய பட்டங்களை இளவரசர் எட்வர்ட் தொடர்ந்து பெற்றார்.






