கிழக்குக் கடலில் மூன்று நாட்களுக்கு மேல் நடைபெற்ற இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான வருடாந்திர இருதரப்பு கடற்படை கூட்டுப்பயிற்சி நேற்றைய தினம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையின் கடற்படைகள் ‘ஸ்லிநெக்ஸ்’ என்கிற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ‘ஸ்லிநெக்ஸ்’ இருதரப்பு கூட்டு பயிற்சி திருகோணமலையில் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமாகி 3 நாட்கள் நடைபெற்றது.
எட்டாவது முறையாக நடத்தப்பட்ட இந்த இருதரப்பு கடற்படை பயிற்சியின் இலங்கை சார்பாக கஜபாஹு மற்றும் ‘சயுர’ ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்கள் பங்கேற்றத்துடன், இந்திய கடற்படை சார்பாக ஐ.என்.எஸ் கமோர்டா மற்றும் ஐ.என்.எஸ் கில்டான் கப்பல்கள் ஹெலிகாப்டர்களுடன் பங்கேற்றன.
இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான தொடர்புகளை மேம்படுத்துதல் மற்றும் கூட்டு கடற்படை நடவடிக்கை பயிற்சிகள் மூலம் அனுபவங்களை பரிமாறிக்கொள்ளும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த கூட்டு கடற்படை பயிற்சியின்போது ‘கில்டான்’ மற்றும் ‘கஜபாஹு’ கப்பல்கள் இடையே ஹெலிகாப்டர் தரையிறங்கும் பயிற்சிகள், கப்பல் வழிசெலுத்தல் பயிற்சிகள், ஆயுதங்களைக் கையாளுதல் மற்றும் படப்பிடிப்பு பயிற்சிகள், தேடல் மற்றும் மீட்பு பயிற்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. என்பதும் குறிப்பிடத்தக்கது.






